அமெரிக்கா வர புதிய கட்டுப்பாடுகள்: தடுப்பூசி மற்றும் சான்றிதழ் அவசியம்! வருகின்ற 8ஆம் தேதி முதல் அமல்!!

தற்போது ஒவ்வொரு நாடுகளிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக விமானத்தில் மூலமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு அந்த நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதிக்கிறது.கொரோனா

அதன் வரிசையில் தற்போது அமெரிக்க அரசு வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நவம்பர் 8ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் உச்சத்திலிருந்த கொரோனா பாதிப்பு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சராசரியாக தினமும் 17 ஆயிரம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டு பயணிகளின் மூலமாக மீண்டும் கொரோனா அதிகரிக்காத வண்ணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி அமெரிக்கா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமெரிக்கா வரும் விமான பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் தடுப்பூசி போடுவதற்கான சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச பயணிகளுக்கு புதிய தடுப்பூசி கொள்கை நவம்பர் எட்டாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment