நீலகிரி முன்னாள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிற்கு புதிய பொறுப்பு! 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்;

நம் தமிழகத்தில் வாரத்திற்கு இரண்டு முறை மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களின் வரிசையின் அடிப்படையில் பார்க்கும்போது நீலகிரி மாவட்டம் தான் அதிக அளவு தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதாக காணப்படுகிறது.

இன்னசென்ட் திவ்யா

இதற்கு முக்கிய காரணம் நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தான். இதற்காக நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு பலரும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்னசன்ட் திவ்யாவிற்கு புதிய பொறுப்பு வழங்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குனராக சுப்பையன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை வருவாய் நிர்வாக ஆணையர் கந்தசாமியை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment