வணிகரீதியாக ஆழ்துளை கிணற்றை பயன்படுத்த மத்திய நிலத்தடி நீர் ஆணையரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் இருந்து 2 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நிலத்தடி நீரின் பயன்பாட்டை கட்டுப்படுத்த மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆழ்துளை கிணறுகளுக்கு தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்று தேசிய பசுமாயம் உத்தரவிட்டு இருந்தது.
இதனிடையே அடுக்குமாடி குடியிருப்புகள், நகர்ப்புற குடிநீர் வினியோக அமைப்புகள், கட்டுமான சுரங்கங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பிரிவினருக்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தடையில்லா சான்றிதழ் பெறாமல் ஆழ்துளை கிணறுகளை வணிக ரீதியாக பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி முடிவடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் இருந்து 2 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே இதுவரை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.