வணிக வரி, பதிவுத்துறையில் புதிய சாதனை: அமைச்சர் மூர்த்தி தகவல்!

தமிழகத்தில் நடப்பாண்டில் வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் ரூ. 86,566 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக வணிகவரித்துறை வசூலில் அதிக வருவாய் ஈட்டுகிறது.

இந்நிலையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் இவ்வாண்டில் மொத்தமாக ரூ. 86,566 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் படி, வணிக வரி துறையில் அக்டோபரில் ரூ.10,678 கோடியாகவும், ஏப்பரல் முதல் அக்டோபர் வரையில் ரூ.76,839 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதே போல் பதிவு துறையில் அக்டோபரில் ரூ.1,131 கோடியும், ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ரூ.9,727 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment