Connect with us

தொழில் துறை சார்பில் எந்தெந்த மாவட்டங்களுக்கு புதிய திட்டங்கள்?

industrial department

Tamil Nadu

தொழில் துறை சார்பில் எந்தெந்த மாவட்டங்களுக்கு புதிய திட்டங்கள்?

தொழில் துறை சார்பில் எந்தெந்த மாவட்டங்களுக்கு புதிய திட்டங்கள்?

இன்றைய தினம் சட்டப்பேரவையில் கனிம வளத்துறை மற்றும் தொழில் துறை சார்பில்  மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு விதமான திட்டங்களை அறிவிக்க தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தயாராக உள்ளதாக தெரிகிறது.

அதிலும் குறிப்பாக எத்தனால் 2022 என்பதன் மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்த நடைமுறை படுத்து உள்ளதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் அவர் தொழில் துறையின் சார்பில் எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன திட்டங்களை அறிவித்தார் என்ற பட்டியல் கிடைத்துள்ளது.

முதற்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூபாய் 1800 கோடி மதிப்பீட்டில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். தஞ்சை மற்றும் உதகையில் ரூபாய் 70 கோடியில் மெனி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை என மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். ஹைட்ரஜனை உற்பத்தி துறையில் முதலீடுகளை ஊக்குவிக்க ஹைட்ரஜன் எரிசக்தி கொள்கை வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் புதிய சிமெண்ட் ஆலையில் ரூபாய் 30 கோடியில் மாற்று எரிபொருள் எரியூட்டும் அமைப்பு நிறுவப்படும் என்றும் அறிவித்தார். கோயம்புத்தூரில் ரூபாய் 500 கோடியில் வான்வெளி பாதுகாப்பு, தொழில்கள் தொடர்பாக பொது வசதி மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top