வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை முற்றிலும் தீர்க்க ரூ. 9,660 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த உள்ளதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி கீழ்பெண்ணாத்தூர் தொகுதி, மேட்ட வளம் போன்ற பகுதிகளில் மேல்நிலைதொட்டி அரசு அமைக்க முன் வருவதோடு கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என். நேரு வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு காவேரி நீரைப் அடிப்படையாக கொண்டு கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
இதற்காக ரூ. 9,660 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த உள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் கூட்டு குடிநீர் திட்டம் முறையாக செயப்படுத்தப்படவில்லை என கூறினார். ஆனால் தற்போது 490 பேரூராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரம் எங்கு இருக்கிறதோ அங்கிருந்து குடிநீர் எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.