மாணவர்களுக்கு புதிய திட்டம்: வானொலி மூலம் வகுப்புகள்!

75da62da31cb612b9c2c503b7a726611

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும், ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் 2021 – 22 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதும் கல்வி தொலைக்காட்சி மூலமும் மாணவர்கள் பாடங்களை படித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு புதிய திட்டம் ஒன்றின் மூலம் வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஒலிவடிவில் அதாவது அகில இந்திய வானொலியில் படங்கள் ஒளிபரப்பு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

ஆன்லைன் வகுப்பு என்றால் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டர் வேண்டும் என்பதும் இன்டர்நெட் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வானொலி மூலம் பாடம் என்பது மிகவும் எளியவர்களுக்கு பயனுள்ள வசதி என்பதும் 100 ரூபாய் இருந்தால் போதும் ஒரு வானொலி வாங்கி விடலாம் என்பதால் இதன் மூலம் பாடங்கள் நடத்துவது அனைத்து மாணவர்களையும் சென்று சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 20 நிமிடங்கள் வீதம் 4 பிரிவுகளாக 80 நிமிடங்கள் பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது. முதல் 20 நிமிடம் 10ம் வகுப்பு பாடங்களும் அடுத்ததாக 3 இருபது நிமிடங்களுக்கு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 வெவ்வேறு பாடங்கள் ஒலி வடிவில் ஒலிபரப்பச் செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment