Entertainment
புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க பாலாஜி மோகனின் புதிய தயாரிப்பு நிறுவனம்
கலைஞர் டிவியில் வந்த நாளைய இயக்குனர் குறும்படங்களின் மூலம் வந்தவர் பாலாஜி மோகன். தனது குறும்படத்தை கொஞ்சம் பெரும்படமாக கிரியேட் செய்து எடுத்த திரைப்படமே காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம். சித்தார்த் அமலா பால் நடித்திருந்தனர். அடுத்ததாக இவர் வாயை மூடி பேசவும் படத்தை இயக்கி இருந்தார். இதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை. அவரின் மாரி, மாரி 2 இரண்டும் ஓரளவு பேசப்பட்டு முன்னணி இயக்குனர்கள் வரிசையில் பாலாஜி மோகன் இடம்பிடித்தார்.

இப்போது புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக ஓப்பன் விண்டோ என்ற பாஸிட்டிவ்வான பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் திரைப்படங்கள் மட்டுமின்றி குறும்படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
