Connect with us

புதிய சர்ச்சையில் கஸ்தூரி- ஜாக்டோ ஜியோவால் வந்த பிரச்சினை

Entertainment

புதிய சர்ச்சையில் கஸ்தூரி- ஜாக்டோ ஜியோவால் வந்த பிரச்சினை

நடிகை கஸ்தூரி நாட்டு நடப்பு சம்பந்தமாக ஏதாவது கருத்துக்களை சொல்லி பிரச்சினையில் சிக்குவதுண்டு. டுவிட்டரில் தொடர் கருத்துக்களை சொல்லி வரும் கஸ்தூரி இதுவரை திமுகவினர், அஜீத் ரசிகர்கள் என பலரோடு சமூக வலைதளங்களில் கருத்துக்களால் மோதியுள்ளார்.

129ec2554167619e7eb85507878f55ee

இப்போது புதிய பிரச்சினையாக ஜாக்டோ ஜியோவின் போராட்டத்திற்கு கருத்து தெரிவித்துள்ள கஸ்தூரி, ஒண்ணாங்கிளாஸ் ஆசிரியருக்கு டைடல் பார்க் பொறியாளரை விட அதிக சம்பளம் என கூறி இருந்தார்.

மேலும் அவர்
தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களை விட மும்மடங்கு சம்பளம், வேலை பளுவோ குறைவு. மாணவர்கள் வெற்றி குறித்த அழுத்தம் , பொறுப்பும் கவலையும் அதினும் குறைவு. செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலை நிரந்தரம். வேறு எங்கும் இல்லாத ஓய்வூதியம், அரசு விருதுகள், பயணத் தள்ளுபடி, இலவச உணவு உள்ளிட்ட சலுகைகள், அரசு செலவில் கல்வி ஆய்வு அல்லது ஆராய்ச்சி செய்ய வெளியூர், வெளிநாடு பயணம், தேர்தல் பணிக்கு பணம், இப்படி அரசு கல்வித் துறையில் பணிசெய்வோருக்கு ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன.

இந்த கருத்தால் எதிர்தரப்பினர் பலர் கடும் கண்டனங்களை டுவிட்டரில் கஸ்தூரியின் பக்கத்திற்கு சென்று சொல்லி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top