37 அரசு கல்லூரிகளுக்கு புதிய முதல்வர் நியமனம்:அரசு அறிவிப்பு;

முதல்வர்

தனியார் மற்றும் அரசு என தமிழகத்தில் அதிக அளவு கல்லூரிகள் காணப்படுகின்றன. இந்த கல்லூரிகளில் பேராசிரியர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளன. பொதுவாக ஒரு தனியார் கல்லூரியில் முதல்வராக உள்ள பேராசிரியர் அதற்கு முன்பு வேறு ஒரு தனியார் கல்லூரியில் உயரிய பதவியை பெற்று உள்ளவராக காணப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு

இந்நிலையில் 37 அரசு கல்லூரிகளுக்கு தற்போது புதிய முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழகத்தில் உள்ள 37 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல், போட்டித்தேர்வு பயிற்சி கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை அரசு நியமனம் செய்துள்ளது பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி வந்த முப்பத்தி ஏழு பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு முதல்வராக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

புதிதாக முதல்வராக  நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேர உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுரை வழங்கியுள்ளார். ஓசூர், கொடைக்கானல், நாகர்கோவில், தேனி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு முதல்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், அவிநாசி, சங்கரன்கோவில், தரகம்பட்டி, வானூர் ஆகிய அரசு கல்லூரிகளுக்கும் கல்லூரி முதல்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print