
செய்திகள்
குடியரசுத்தலைவர் தேர்தலிலும் வெற்றி பெற்ற பாஜக!! புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு?
நம் இந்தியாவின் மூத்த குடிமகனாக கருதப்படுபவர் குடியரசுத் தலைவர். மேலும் இவரே முப்படைகளின் தலைவராகவும் இருப்பார். இந்த நிலையில் நம் இந்தியாவில் தற்போது குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றுக் கொண்டு வந்தது.
இதன் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பாஜக சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவருக்கு ஆதரவளிப்பதாக அதிமுகவினரும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிகிறது. அதன்படி பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் சுமார் 70 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார் திரௌபதி முர்மு.
அசாம், சத்தீஸ்கர், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது எனவே குடியரசுத் தலைவர் ஆகிறார்.
