தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
அதே போல் சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இதனிடையே சில தினங்களுக்கு முன் வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பியது.
இதற்கிடையில் இன்று மாலை படத்தின் 2-வது சிங்கிள் பாடல் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் தற்போது புதிய போஸ்டரை வெளியிட்டு உள்ளனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.