
பொழுதுபோக்கு
தனுஷின் நானே வருவேன் படத்தின் புது போஸ்டர் இதோ!
முன்னணி இயக்குனரும் அண்ணனுமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கூட்டணியில் நான்காவது முறையாகஉருவாகும் திரைப்படம் நானே வருவேன். வி க்ரியேஷன் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க மேயாத மான் மற்றும் பிகில் புகழ் இந்துஜா நாயகியாக நடிக்கிறார், எல்லி அவ்ர்ராம் மற்றொரு நாயகியாக நடிக்கிறார். நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் கூடுதல் தகவலாக படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடத்துள்ளார். ஹீரோ, வில்லன் இரண்டுமே இவர் தான்.
இப்படத்தை இயக்குவது மட்டுமின்றி, செல்வராகவன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ற நிலையில், அடுத்தாக படத்தின் டீசருக்கு மிகவும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளானஇன்று நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. மாதத்திற்கு ஒன்று என தனுஷின் படத்தின் அப்டேட் வருவதால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளனர்.
தி லெஜண்ட் சரவணன் படத்தின் திரை விமர்சனம்! படம் குறித்து மக்களின் கருத்துக்கள்!
தனுஷின் பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
