Connect with us

உதயநிதிக்கு புதிய பதவி: குவியும் வாழ்த்துக்கள்

Tamil Nadu

உதயநிதிக்கு புதிய பதவி: குவியும் வாழ்த்துக்கள்

7896cb1d93a92343d0d8a73c3811f831

சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி அவர்களுக்கு புதிய பதவி அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

நடிகரும், தயாரிப்பாளரும் ,திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு புதிய பதவி ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவியில் அவர் மூன்று ஆண்டுகாலம் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அவர்கள் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதிக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவி வழங்கப்பட்டதை அடுத்து திமுக தொண்டர்கள் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top