Connect with us

பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய உத்தரவு! அவ்வப்போது அனைத்தையும் அப்டேட் பண்ண வேண்டும்;

engineering2

News

பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய உத்தரவு! அவ்வப்போது அனைத்தையும் அப்டேட் பண்ண வேண்டும்;

பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய உத்தரவு! அவ்வப்போது அனைத்தையும் அப்டேட் பண்ண வேண்டும்;

சில வாரங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு முடிந்தது. இந்த செமஸ்டர் தேர்வில் மாணவர்களின் விருப்பப்படி ஆன்லைனில் நடத்தப்பட்டதாக காணப்படுகிறது.

ஏனென்றால் தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு சில வாரங்களுக்கு முன்பு அதிகமாக இருந்ததால் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் வைக்கப்பட்டது. அதுவும் குறிப்பாக பொறியியல் தேர்வுகளும் ஆன்லைனில் வைக்கப்பட்டது.

ஆனால் இறுதி பருவ மாணவர்கள் மட்டும் நேரடியாக காலேஜ்க்கு வந்து நேரடித் தேர்வு முறையில் எழுத உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் சாதாரணமான நிலைமை திருப்பிக் கொண்டு வருகிறது.

இதனால் தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறுள்ள நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கு AICTE  உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி பொறியியல் கல்லூரிகள் தங்களது கல்லூரி தொடர்பான அனைத்து விவரங்களையும் பொறியியல் கல்லூரிகள் இணையதளத்தில் புதுப்பிக்க AICTE ஆணை பிறப்பித்துள்ளது.

அங்கீகாரம், கல்வி கட்டணம், உள்கட்டமைப்பு போன்ற விவரங்களை இணையதளத்தில் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும் என்று AICTE ஆணை பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top