Connect with us

தென்காசி மாவட்டமாகிறதா?

செய்திகள்

தென்காசி மாவட்டமாகிறதா?

ஒரு காலத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் எல்லாம் ஒன்றாக இருந்தவை. நிர்வாக வசதிக்காக வெள்ளைக்காரர்கள் காலத்திலேயே இவை பிரிக்கப்பட்டன.

bc02f434adda8df890c6d739b380a275

இருப்பினும் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய மாவட்டமாக இருந்த மாவட்டமாக இருந்த ராமநாதபுரம் பிரிக்கப்பட்டு சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் அரியலூர், பெரம்பலூர்,திருவாரூர் போன்ற சிறிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.

அது போல் மிகப்பெரும் மாவட்டமாகவும் பல்வேறு சட்டசபை தொகுதிகளை கொண்டிருந்த விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி விழுப்புரத்தில் இருந்து நீக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக முதல்வர் எடப்பாடியால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மிகப்பெரும் மாவட்டமான திருநெல்வேலியையும் அதில் இருந்து நிர்வாக வசதிக்காக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தென்காசியை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நெல்லையில் இருந்து பிரிந்து பல வருடங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் உருவானது ஆனால் நீண்ட நாட்களாக நெல்லை மாவட்டம் அதற்கு பின் மக்கள் நெருக்கத்தை கவனத்தில் கொண்டு பிரிக்கப்படவில்லை.

தென்காசியை தலைமையிடமாக வைத்து புதிய மாவட்டத்தை உருவாக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி திருநெல்வேலி கலெக்டருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top