திடீரென பரவும் புதியவகை வைரஸ்: பொதுமக்கள் அதிர்ச்சி

கேரளாவில் திடீரென புதிய வகை வைரஸ் பரவி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தியாவிலேயே கேரளாவில் தான் மிக மோசமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதும் தற்போதும் கூட தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 50க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு என்ற பகுதியில் புதிய வகை நோரோ என்ற வைரஸ் பரவி வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வயநாடு பகுதியில் இதுவரை 13 பேர் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் புதிய வகை நோரோ வைரஸ் பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment