விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற அஸ்வின் மற்றும் புகழ் ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்த ஹேஷ்டேக் திடீர் என வைரலாகி வருகிறது.
அஸ்வின், புகழ் ஆகிய இருவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் போதே நெருக்கமாக இருந்த நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரு திரைப் படத்தில் நடிப்பதால் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை ஹரிகரன் என்பவர் இயக்குகிறார் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.