மீண்டும் வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு பாதிப்பா?

வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

வங்கக்கடலில் சமீபத்தில் உருவாக்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து கரையை கடந்தது என்பதும் இதனால் கனமழை பெய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு இருந்தாலும் அதனால் தமிழகத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகும் என்றும் இன்று காற்றழுத்த தாழ்வு மேற்கில் நகர்ந்து இலங்கை கடற் பகுதியை நோக்கி செல்லும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எனவே இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் பெரும் பாதிப்பு இருக்காது என்றும் தெற்கு தமிழகத்தில் மட்டும் ஓரளவுக்கு மழை பெய்யும் என்றும் ஆனால் இலங்கையில் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.