இன்று புதிய காற்றழுத்த தாழ்வு.. மீண்டும் பள்ளி விடுமுறை.. மீண்டும் கனமழை?

வங்க கடலில் இன்று மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு தோன்ற இருக்கும் நிலையில் மீண்டும் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது .

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என்றும் அதன்பின் புயலாக மாறி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே. இந்த புயலால் கனமழை பெய்தது என்பதும் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தான் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் இன்று மீண்டும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

rain 1

இதன் காரணமாக தமிழகம் புதுவை ஆகிய பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்று தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடலோர பகுதிகளை நெருங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இலங்கையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் தென் பகுதியில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று முதல் டிசம்பர் 17 வரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் 19ஆம் தேதி தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.