டி20 உலகக்கோப்பை போட்டி: இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி அறிமுகம்

உலக கோப்பை டி20 போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த போட்டிக்கு இந்தியா பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகளும் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த ஜெர்சிyai அணிந்து விராத் கோலி, கேஎல் ராகுல், ரோஹித் சர்மா உள்ளிட்டோர் கொடுத்த போஸ் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் டி20 போட்டிகளில் இந்த ஜெர்ஸி தான் இந்திய அணிக்கு வழங்கப்படும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.