ஐபோன்களை குறிவைக்கும் புதிய மால்வேர்.. சைபர் அட்டாக்கால் அதிர்ச்சியில் பயனர்கள்..!

ஐபோன் பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஐபோன் பயனார்களை குறி வைத்து புதிய மால்வேர் உருவாக்கி சைபர் க்ரைம் நபர்கள் பல்வேறு முறைகேடுகளை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களை பல்வேறு மால்வேர் பயன்படுத்தி அவர்களுடைய டேட்டாக்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பல முறைகேடுகளை செய்து வருகிறார்கள் என்பதை பார்த்தோம். தற்போது இந்த மால்வேர் ஐபோனுக்கும் சைபர் அட்டாக் செய்பவர்கள் பயன்படுத்த தொடங்கி விட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஐபோனை குறி வைத்து புதிய மால்வேர் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த மால்வேர் மூலம் அனுப்பப்படும் மெசேஜ்கள் ஐபோன் பயனாளர்களின் முழு டேட்டாவையும் எடுக்கக்கூடிய வல்லமை உண்டு என்றும் அதனால் ஐபோன் பயனர்கள் தங்களது டேட்டா மட்டும் இன்றி வங்கி கணக்கில் உள்ள பணத்தையும் இழக்க வாய்ப்பிருப்பதாகவும் சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி கூறியுள்ளது.

மெசேஜ் வழியாக ஐபோன்களுக்கு இந்த மால்வேர் அனுப்பப்படுவதாகவும் தெரியாமல் இந்த மெசேஜை கிளிக் செய்து விட்டால் உடனே இந்த மால்வேர் உங்கள் ஐபோனில் இன்ஸ்டால் ஆகிவிடும் என்றும் அதன் பிறகு உங்கள் ஐபோன் சைபர் அட்டாக் நபர்களின் முழு கட்டுப்பாட்டுக்கு வந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தீங்கிழக்கூடிய மால்வேர் பல ஐபோன் பயனர்களிடம் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இப்போதைக்கு இந்த அச்சுறுத்தல் மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும் வரும் நாட்களில் இந்த மால்வேர் மூலம் ஐபோன் பயனாளர்கள் மிகப்பெரிய பாதிப்பை பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே ஐபோன் பயனர்கள் லேட்டஸ்ட் வடிவமைப்பான ஐஓஎஸ் 16 மற்றும் அதற்கு மேல் இயங்கும் அப்டேட்டில் வைத்து கொள்ள வேண்டும் என்றும், ஆனால் அதே நேரத்தில் அப்டேட் செய்தாலும் இந்த மால்வேர் இயங்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் ஒருவரின் ஐபோன் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

தனி உரிமை பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்ட இந்த தொழில்நுட்ப காலத்தில் பயனர்கள் தான் தங்கள் டேட்டாக்களை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews