எச்சரிக்கை: உருவானது புதிய காற்றழுத்த பகுதி.. வானிலை அப்டேட்!!

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும் என தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 23ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், கரூர், நாமக்கல் , திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அதே போல் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இன்று மட்டும் கனமழை பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment