Connect with us

₹93 கோடி செலவில் கோயம்பேட்டில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலம் திறப்பு!

bridge

News

₹93 கோடி செலவில் கோயம்பேட்டில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலம் திறப்பு!

₹93 கோடி செலவில் கோயம்பேட்டில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலம் திறப்பு!

தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் பல்வேறு வாக்குறுதிகள் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். அவர் இன்றைய தினம் சென்னை கோயம்பேட்டில் புதிய மேம்பாலம் ஒன்றை திறந்து வைத்தார்.ஸ்டாலின்

அதன்படி சென்னை கோயம்பேட்டில் 93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கோயம்பேடு புதிய மேம்பாலத்தால் 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த மேம்பாலத்தை திறந்து வைத்த முகஸ்டாலின் அதில் சிறிது தூரம் நடந்து சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட மேம்பாலம். இந்த புதிய பாலத்தால் 2 சிக்னல் சந்திப்புகளில் வாகனங்கள் நிற்காமல் செல்லும் சூழல் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top