திமுக ஆட்சியில் 17,000 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள்!-முதல்வரின் மகன் பேச்சு;

இந்தியாவிலேயே விலை குறைவாக பொருட்கள் நியாயமாக கிடைக்கும் என்ற இடம் என்றால் அதனை ரேஷன் கடைகள் என்று கூறலாம். அதுவும் தமிழ்நாட்டில் எந்த ஒரு மாநிலம் செய்யாத அளவுக்கு இலவச அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த ஆட்சியில் மட்டும் 17,000 குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டதாக எம்எல்ஏ ஒருவர் கூறியுள்ளார். அதன்படி திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 17,000 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று முதல்வரின் மகனும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டுவருவதே திமுகவின் இலக்கு என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டை பார்த்து நீங்கள் திருந்த வேண்டும் என மோடியைப் பார்த்து ராகுல் காந்தி பேசினார் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

மதரீதியான பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். திமுகவினர் அனைவரும் 10 வாக்குகளைப் பெற்ற நான் பொறுப்பு என உறுதி ஏற்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment