12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: எந்தெந்த பகுதிகளில் கனமழை?

இன்னும் 12 மணி நேரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்ற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே வங்கக் கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது

மழையின் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் மீண்டு வர முடியாத நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை ஆகிய பகுதியில் மிக கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment