இன்னும் 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்ககடலில் இன்னும் 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்றும் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வங்கக்கடலில் கடந்த சில நாட்களில் 3 காற்றழுத்த தாழ்வு அடுத்தடுத்து தோன்றியது என்பதும் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் ஒன்று தோன்றி இருப்பதாகவும் அந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு கிழக்கு மத்திய வங்கக் கடலை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment