Connect with us

உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு: 14 மாவட்டங்களுக்கு கனமழை!

News

உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு: 14 மாவட்டங்களுக்கு கனமழை!

76b38b67c678916d9470f17a858ad0f2

மத்திய கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதை அடுத்து 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்றும் அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செப்டம்பர் 24-ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

அதன்படி இன்று மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக நாமக்கல், ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, நீலகிரி உள்பட 14 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top