அந்தமானில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு: சென்னையை நோக்கி வருமா?

அந்தமான் பகுதியில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாகவும் அந்த காற்றழுத்த தாழ்வு சென்னையை நோக்கி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னையை நோக்கி கரை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது என்றும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாளை அந்தமான் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை நோக்கி வருமா? என்பதை இன்னும் ஒரு சில நாட்கள் கணீத்து விடலாம் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஏற்கனவே கனமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வெள்ளத்தில் சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு சென்னையை நோக்கி வந்தால் சென்னை தாங்காது என்று சென்னை மக்கள் அச்சத்துடன் தெரிவித்து வருகின்றனர்

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment