நடிகர் அஜித் மீது புதிய புகார்! குழப்பத்தில் ரசிகர்கள்!

தல அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் துணிவு. சமீபத்தில் இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான அன்று காலையில் சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாடி வந்தனர்.

அப்போது சாலையில் சென்ற லாரி மீது ஏறி நடனமாடிய பரத் குமார் என்ற 19 வயதுடைய ரசிகர் ஒருவர் கீழே விழுந்து முதுகு தண்டுவடம் உடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரசிகர் மன்றங்களை களைத்து விட்டதாக கூறி தொடர்ந்து ரசிகர்களையும் புறக்கணித்து அவர்களை நல் வெளிப்படுத்த தவறி வரும் நடிகர் அஜித் குமார் அவர்களின் பொறுப்பற்ற தன்மைக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் கடும்கண்டனத்தை தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படம் நடித்து கோடி கோடியாக சம்பாதிப்பது உண்மையே குறியாக இருக்கும் அவர் மீது தமிழக அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கூறி வருகின்றனர்.

அண்ணாமலைக்கு அனல் பறக்கும் பாதுகாப்பு!

மேலும் மரணமடைந்த ரசிகர் குடும்பத்திற்கு அஜித் அவர்கள் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு தனது பொறுப்பற்ற தன்மைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.