Connect with us

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு!!

Eknath Shinde

செய்திகள்

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு!!

கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஏனென்றால் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மகாராஷ்டிரா முதல்வர் உத்தர தாக்கரே தோல்வியடைந்தார். இதன் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மை நிரூபிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. மகாராஷ்டிராவில் இன்று நடைபெறும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் புதிய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அதிருப்தி எம்எல்ஏக்கள் போருக்குடி உயர்த்திய நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்  உத்தர தாக்கரே. ராஜினாமா செய்ததை அடுத்து பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிர முதலமைச்சர் ஆனார் மகாராஷ்டிரா ஏக்நாத் ஷிண்டே.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் பலம் 288 ஆக உள்ள நிலையில் பாஜகவின் கைவசம் 106 எம்எல்ஏக்கள் உள்ளனர் . மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர்  ஏக்நாத் ஷிண்டேவுக்கு சுமார் 50 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top