செய்திகள்
புதிய முதல்வர் பதவியேற்பு: ராகுல்காந்தி நேரில் வாழ்த்து!
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்த அமரிந்தேர் சிங் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்பார் என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றார் என்பதும் இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் பங்கேற்றனர் என்பதும், பதவி ஏற்றுக்கொண்ட சரண்ஜித் சிங் சன்னி அவர்களுக்கு ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே அரசியல் பரபரப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து முதல்வர் அமரிந்தேர் சிங் ராஜினாமா செய்தார். இதனை அடுத்து சரண்ஜித் சிங் சன்னிஅவர்கள் முதல்வர் புதிய முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாப் மாநில முதல்வராக இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
தொழில்நுட்ப கல்வி துறை அமைச்சராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி தற்போது முதல்வராக உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் முதல்வர் என்பதால் அவருக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
