திரிபுராவில் புதிய முதலமைச்சர்? எம்எல்ஏ கூட்டத்தில் திட்டவட்ட முடிவு…!!

நாம் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக பல்வேறு விதமான ஆட்சி மாற்றங்களை பார்த்துக்கொண்டு வருகிறோம். அதுவும் குறிப்பாக பாகிஸ்தானில் இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவர் தோல்வியடைந்ததால் அங்கு புதிய பிரதமர் பதவி ஏற்றார்.

மேலும் இலங்கையிலும் இதுபோன்றுதான் மகிந்த ராஜபக்ச பதவி விலகிய உடன் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார். இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் தற்போது முதலமைச்சர் மாறியுள்ளதாக தெரிகிறது.

அதன்படி திரிபுரா மாநில புதிய முதலமைச்சராக மாணிக் சாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அகர்தலாவில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சராக மாணிக் சாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேப் பதவி விலகியதை அடுத்து அடுத்த புதிய முதல்வராக மாணிக் சாகா  தேர்வாகியுள்ளார். இதனால் மாணிக் சாகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment