TNPSC தேர்வில் புதிய மாற்றம் !! என்ன தெரியுமா ?
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், 300 மதிப்பெண்களில் 90 பெற்றால் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் பெயர் வெளியிடப்படும் எனவும் தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் TNPSC மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பதிவிகளுக்கான தேர்வை கணிணி வழியாக நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தேர்வுக்கு விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தைகள் மேம்பாடு மற்றும் குற்றவியல் ஆகியவற்றின் ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத சம்பளம் ரூ. 56,100 முதல் ரூ. 2.5 வரை ஊதியம் பெருவார்கள். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 32-க்குள் இருக்க வேண்டும்.
இதுவரையில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கணிணி வழியில் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான தேர்வும் கணிணி முறையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூடுதல் விவரங்களை அறிய TNPSC- யின் அதிகாரப்பூர்வமான www.tnpsc.govt.in என்ர இணையதளத்தினை பார்வையிடுவதின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
