
Tamil Nadu
ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்: அமைச்சர் சக்கரபாணி அதிரடி!!
தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் நியாயவிலைக் கடைகளில் இலவசமாக அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இதனால் பலகோடி ஏழை மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு என்பது முக்கியமாக அமைகிறது. ஆனால் பல பேருக்கு கைரேகை பதிவு சரியாக பதியாமல் இருப்பதாக பல குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதனால் பலபேர் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலையில் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக முதியோர்களின் கைரேகை கைரேகை பதிவுகள் அதிகமாக பதியாமல் போகுவதாகவும் பலர் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.
இதற்கு தீர்வு காணும் விதமாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி புதிய திட்டம் ஒன்று விரைவில் கொண்டு வரப்படுவதாக கூறியுள்ளார். அந்த வகையில் அனைத்து நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை திட்டம் கொண்டுவரப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாள்கள் ரேஷன் கடைகளை அடைக்கப்படுவதால் குறிப்பிட்ட நாட்களில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் அனைத்தும் முன்னதாகவே அதாவது 7ம் தேதிக்கு முன்னதாகவே வாங்கிகொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
