பொறியியல் கல்லூரி விண்ணப்பத்தில் இன்று முதல் புதிய பிரிவு சேர்ப்பு!

bc8061b3adf1b9ca746a0fc2b353a687

வன்னியர்களுக்கு 10.5% குறித்த அரசாணை நேற்று இரவு வெளியானது என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
10.5% இட ஒதுக்கீடு என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும் அது தற்போது நிறைவேறி உள்ளதாகவும் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்

இந்த நிலையில் நேற்று முதல் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அதில் இன்று முதல் புதிய பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. நேற்று 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அரசாணை வெளியிட்ட நிலையில் இன்று பொறியியல் விண்ணபத்தில் எம்பிசி பிரிவு V என்ற  புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் இந்த பிரிவின் படி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பொறியியல் கல்லூரிகள் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து இந்த ஆண்டு வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு அதிக அளவில் பொறியியல் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 10.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு தகுதியான மாணவர்கள் யார் இந்த பிரிவை குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment