Connect with us

அதிர்ச்சி!! டெல்லியில் புதிதாக குரங்கம்மை நோய் பாதிப்பு..!!!

செய்திகள்

அதிர்ச்சி!! டெல்லியில் புதிதாக குரங்கம்மை நோய் பாதிப்பு..!!!

தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய குரங்கு அம்மை நோயானது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இத்தகைய வைரசால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உயிரையும் காவு வாங்கியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் 30 வயதான நைஜீரியப் பெண்ணுக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக எம்டி எல்என்ஜேபி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே பாதிக்கப்பட்டுள்ள பெண் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதே சமயம் இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பானது 13 -ஆக டெல்லியில் எட்டியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியை மட்டும் பொறுத்தவரையில் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களை தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top