புதிய கேப்டன் ரோஹித் சர்மா! நியூஸிலாந்தோடு மோதும் இந்திய அணி அறிவிப்பு!!

தற்போது t20 வேர்ல்டு கப் நடைபெறுகிறது. இதில் அரையிறுதிக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாமல் வெளியேறியது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

இந்திய அணி

அதோடு மட்டுமல்லாமல் விராட்கோலி தலைமையிலான டி20 தொடர் இதுவே கடைசி என்பதும் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.இந்த நிலையில் அடுத்து நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர்போட்டியில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான இந்த 20 ஓவர் போட்டியில் கேப்டனாக ரோஹித் சர்மாவை பிசிசிஐ அறிவித்துள்ளது.தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல், ருத்ராஜ் கெய்க்வாட்,ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

அவர்களோடு சூரியகுமார், ரிஷப் பந்த், இஷன் கிஷன், வெங்கடேஸ் ஐயர் அஸ்வின் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பவுலர்கள் வரிசையில் அக்சர் பட்டேல், ஆவேஸ் கான், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், தீபக் சஹர், ஹர்ஷல் படேல், சிராஜ் உள்ளிட்டோருக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment