13-ஆம் தேதி எச்சரிக்கை! அதே வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

தமிழகத்தில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவானது,இவை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடல்

அதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு தற்போது ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இவை 13ஆம் தேதி உருவாகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி வங்கக்கடலில் நவம்பர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தீவிரம் அடையும் என்றும் கூறியுள்ளது.இவை வலுவடைந்து புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment