இந்தியாவில் நுழைந்த புதிய வகை வைரஸ்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் என்பதும் தற்போதுதான் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாறி டெல்டா வைரஸ் உள்பட பல வகைகளிலும் பரவி வருவதாக செய்திகள் வெளியான போதிலும் இந்தியாவில் பெரிய பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திடீரென தற்போது புதிய வகை வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ்களில் ஒன்றான AY 4.2 என்ற புதிய வகை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் பெங்களூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த AY 4.2 வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மற்றும் கர்நாடக மாநில அரசு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் திடீரென புதிய வகை வைரஸ் பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment