இல்லம் தேடி கல்வி:விருப்பம், விருப்பமின்மை தெரிவிக்கலாம்; தமிழக அரசு புது அறிவிப்பு!

தற்போது தமிழகத்தில் பல குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.  ஏனென்றால் தமிழகத்தில் குழந்தைகளுக்கு இன்னும் பள்ளி திறக்கவில்லை. இதனால் பல குழந்தைகள் தவறான வழிக்கு செல்வதோடு மட்டுமில்லாமல் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.தமிழக அரசு

இதனை போக்கும் வண்ணமாக தமிழக அரசால் “இல்லம் தேடி கல்வி” என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்தில் பல புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது.

அந்த படி இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் இணையதளத்தில் பதிவு செய்யவும் அரசு அறிக்கை கூறியுள்ளது.

பயிற்சியில் கருத்தாளர்கள் செயல்பட அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் EMIS இணையதளத்தில் staff  LOGINல் உள்ள ITK RP’s option மூலம் விருப்பம் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

அக்டோபர் 28ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள்  தங்களது விருப்பம், விருப்பமின்மை போன்ற விவரத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment