Tamil Nadu
கமல் தலைமையில் புதிய கூட்டணி: காங்கிரஸ், அமமுக இணையுமா?
கமலஹாசன் தலைமையில் புதிய கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில் அந்த கூட்டணியில் காங்கிரஸ். அமமுக, தேமுதிக. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கமல்ஹாசனின் கூட்டணியில் ஏற்கனவே சரத்குமார் கட்சி மற்றும் ஐஜேகே கட்சி இணைந்து உள்ளன இந்த நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும், அதிமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் தேமுதிக உள்பட ஒருசில கட்சிகளும் கமல் தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
அதே போல் தனி அணி அமைத்துள்ள தினகரனின் அமமுக, அப்படியே கமல் கூட்டணியில் இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திமுக அதிமுக ஆகிய இரண்டு கூட்டணிக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த புதிய மூன்றாவது கூட்டணி இருக்கும் என்றும் இந்த கூட்டணி ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகுதிகளை கைப்பற்றும் அளவுக்கு வலுவானது என்றும் அவ்வாறு கைப்பற்றினால் ஆட்சி அமைப்பது யார் என்பதை முடிவு செய்யும் கூட்டணியாக இந்த மூன்றாவது கூட்டணி இருக்கும் என்றும் அரசியல் கட்சி விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்
