Connect with us

புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு!! பி.ஆர்.பாண்டியன் கைது !!

PR Pandian

தமிழகம்

புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு!! பி.ஆர்.பாண்டியன் கைது !!

விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பொதுமக்களை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது.

குறிப்பாக புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏகனாபுரம் மக்களை சந்திக்க சென்றதாக தெரிகிறது.  இந்த சூழலில் காஞ்சிபுரம், நீர்வள்ளூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தாக கூறப்படுகிறது.

இத்தகைய செயலானது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top