அட்ராசக்க..! சென்னை, ஓசூரில் புதிய விமான நிலையம்..தமிழக தொழில்துறை அதிரடி..
ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய விமான நிலைய ஆணை அதிகாரிகள் சமர்பித்து இருப்பதாக தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு விஷயங்கள் தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா ஆகியவற்றை கருத்தியில் கொண்டு ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓசூர் பகுதியில் தொழிற்சாலை பகுதிகளுக்கு ஒரு மையமாக இருப்பதால் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியில் உள்ள விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் அதன் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்துவருவதாக தொழில் துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு சமர்பித்து உள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் ஓரக்கடத்தில் மருத்துவ பூங்காக்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பூங்காக்கள், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் வாகனங்களுக்கான பூங்காக்கள் அமைக்கப்படும் என தொழில் துறையில் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
