கடந்த சனிக்கிழமை அன்று தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதற்காக கூடப்பட்டது. இதில் தமிழக அரசுடன் சேர்த்து 12 கட்சிகள் ஆதரவு அளித்து ஒருமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் நீட் தேர்வில் விலக்கு கோரி முதலமைச்சர் ஸ்டாலின் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் மனு அளித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப்பணி கோவையில் புதிதாக எய்ம்ஸ் அமைப்பது தொடர்பாகவும் கோரிக்கை வைத்துள்ளார்.
6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாகவும் கோரிக்கை வைத்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசு நிதியில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பல்நோக்கு மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் 50 சதவீத ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தல் செய்துள்ளார்.