மருத்துவ உலகில் புதிய சாதனை – எய்ட்ஸ் சிகிச்சை வரலாற்றில் புதிய திருப்பம்..
மருத்துவ உலகில் புதிய திருப்பமாக தொப்புள் கொடி ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல் மாற்றுஅறுவை சிகிச்சையில் எய்ட்ஸ் நோய்யால் பாதிக்கப்பட்ட பெண் குணம் அடைந்துள்ளார்.
அமெரிக்காவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு தொப்புள் கொடி ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் மூலம் மாற்று அறுவை நடத்தினர்.
அப்போது அந்த பெண்ணுக்கு இரத்த புற்று நோய் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அந்த பெண்மணி எய்ட்ஸ் நோய்யால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நோய்க்கு ஸ்டெம் செல்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட 14 மாதங்களில் எய்ட்ஸ் நோய்யில் இருந்து குணமடைந்தது தெரியவந்தது.
ஏற்கனவே ஆண்கள் 2 பேருக்கு எலும்பு மச்சையில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் குணமடைந்த நிலையில் தற்போது தொப்புள் கொடி ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல் மாற்றுஅறுவை சிகிச்சையிலிருந்து எய்ட்ஸ் நோய்யால் இந்த பெண் குணம் அடைந்துள்ளார்.
எலும்பு மஞ்சையில் இருந்து செய்யப்படும் ஸ்டெம் செல் சிகிச்சை எய்ட்ஸ் நோய் குணப்படுத்தும் என்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல என ஆராட்சியாளர்கள் கூறி வந்தனர். ஆனால் தொப்புள் கொடி ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல் சிகிச்சை பலருக்கும் செய்யமுடியும் என ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
