நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம் !!
தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது. இருப்பினும் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக பூவுலகின் நண்பர்கள் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் இடம் பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு அருகில் இருப்பதால் புலிகள் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனிடையே நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதினால் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே மேற்குதொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பு முக்கியம் என்று உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
