தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தனது ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டு அவரை ஆச்சரியப்படுத்திய தகவல் தற்போது புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது
தமிழ் திரையுலகின் நடிகரான சூர்யா தனது ரசிகர்கள் மத்தியில் அன்புடன் இருப்பார் என்பதால் ’அன்பான சூர்யா’ என்று அவர் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹரி என்ற தனது ரசிகருக்கு திருமணம் நடப்பதை கேள்விப்பட்ட சூர்யா அவரது திருமணத்தில் திடீரென முன்னறிவிப்பின்றி கலந்துகொண்டார். இதனால் அந்த ரசிகரும் அவரை திருமணம் செய்த பெண்ணும் ஆச்சரியமடைந்தனர்
ரசிகரின் தோளில் கைபோட்டு அவருக்கு ஆசி வழங்கிய சூர்யா அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ரசிகர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் நடிகர்கள் மத்தியில் ரசிகரின் திருமணத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இன்ப அதிர்ச்சி அளித்த சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இருப்பினும் அவர் திருமணத்தில் கலந்து கொண்டபோது மாஸ்க் அணியவில்லை என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.