நெட்பிளிக்ஸ் வாங்கிய அந்த 19வது படம் இதுதான்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இதுவரை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் சப்ஸ்கிரைப் செய்தவர்கள் புலம்பிக்கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென ஒரே நாளில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்கள் நடித்த 18 திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கி இருப்பதாக நேற்று அடுத்தடுத்து அறிவித்தது. அதில் தல அதில் அஜித் நடிக்க இருக்கும் 62வது படமும் அடங்கும் என்பதால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்

ஆனால் அதே நேரத்தில் இந்த 18 படம் மட்டுமல்ல இன்னும் ஒரு மிகப்பெரிய படத்தையும் வாங்கி இருப்பதாகவும் அந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அறிவித்தது. அந்த படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் யோசித்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அது தளபதி விஜய் நடித்துவரும் ’தளபதி 67’ படம் என்று தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இளைஞர்கள் மட்டுமே தற்போது திரையரங்கங்களுக்கு வந்து படம் பார்க்கும் நிலையில் ஓடிடியில் உள்ள பெரும்பாலான ரசிகர்களை வளைக்கும் வகையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 2000 கோடியை முதலீடு செய்திருப்பதாகவும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களையும் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கிய 18 படங்களையும் பெயர்கள் இதோ:

1. அஜித்தின் ஏகே 62

2. ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2

3. லைகா தயாரிப்பில் அருள்நிதி – பாரதிராஜா நடிக்கும் படம்

4. லைகா தயாரிப்பில் ஜெய்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம்

5. லைகா தயாரிக்கும் விதார்த்-யோகிபாபு நடிக்கும் படம்

6. வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

7. விஷ்ணு விஷால் நடித்த ஆர்யன்

8. விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி

9. ஜெயம் ரவியின் இறைவன்

10. விக்ரம் பிரபுவின் இறுகப்பற்று

11. கார்த்தி நடித்த ஜப்பான்

12. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்

13. உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன்

14. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா

15. சமுத்திரக்கனி நடிக்கும் தலைகோதல்

16. விக்ரம் நடிக்கும் தங்கலான்

17. தனுஷ் நடிக்கும் வாத்தி

18. ஜீவா நடித்த வரலாறு முக்கியம்

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.