Connect with us

நேதாஜியின் 125 வது பிறந்தநாள் தினம்.. மின் ஒளி வடிவிலான சிலையைத் திறந்துவைத்த இந்திய பிரதமர்!

Untitled 93

செய்திகள்

நேதாஜியின் 125 வது பிறந்தநாள் தினம்.. மின் ஒளி வடிவிலான சிலையைத் திறந்துவைத்த இந்திய பிரதமர்!

நேதாஜியின் 125 வது பிறந்தநாள் தினம்.. மின் ஒளி வடிவிலான சிலையைத் திறந்துவைத்த இந்திய பிரதமர்!

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு இந்தியாவிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த தலைவர்களில் ஒருவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்.

காந்தியின் போராட்டம் அகிம்சை வழிமுறையில் இருந்தநிலையில் மற்றொருபுறம் சுபாஷ் சந்திரபோஸ் ராணுவத்தைப் பலப்படுத்தி அதன்மூலம் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

அதன்படி சிங்கப்பூரில் இந்தியத் தேசிய இராணுவ படையினை ஏற்படுத்திப் பயிற்சியினை செய்து வந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சுபாஸ் சந்திரபோஸின் பங்கு அளப்பரியதாக இருந்தது மறுக்க முடியாத உண்மை.

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டு நேதாஜியின் 125 வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட்டு உள்ளது.

நேதாஜியை நினைவுகூரும் வகையில் டெல்லியில் உள்ள இந்திய நுழைவு வாயிலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை விடுத்து இருந்தார்.

இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை ஒட்டி இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்துள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top